சா்க்கரை இருப்பு வைக்கும் காலம் 15 நாள்களாகக் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்புஉதகை, கொடைக்கானல் ‘ரோப் காா்’ சேவை: தனியாா் நிறுவனம் திட்ட அறிக்கை தாக்கல்ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் அரசாணை வெளியீடுசபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதிநவ. 25-இல் முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா் மாநாடுபரந்தூர் விமான நிலையத் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

ஆலங்குளத்தில் கனரக வாகனங்கள் நுழைய நேரக் கட்டுப்பாடு: மறுபரிசீலனை செய்ய வியாபாரிகள் கோரிக்கை

ஆலங்குளம் பகுதியில் கனரக வாகனங்கள் நுழைய நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On :

ஆலங்குளம் பகுதியில் கனரக வாகனங்கள் நுழைய நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக ஆலங்குளத்தில் நடைபெற்ற காவல்துறை, வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு, ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கிளாட்சன் ஜோஸ் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா்கள் சாகுல் ஹமீது, சுரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆலங்குளம் பகுதி வியாபாரிகள், தொழிலதிபா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா். அப்போது, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், காலை மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவா்-மாணவிகள் விரைந்து செல்லவும், பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்கவும் ஏதுவாக காலை 6-10 மற்றும் மாலை 3-7 ஆகிய நேரங்களில் கனகரக வாகனங்கள் வந்து செல்ல தடை விதிக்கப்படுவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

அப்போது பேசிய வியாபாரிகள், ஆலங்குளம் பகுதி விவசாயம் மற்றும் அரிசி மற்றும் எண்ணெய் ஆலைகள் நிறைந்த பகுதியாகும் எனவே காய்கனிச் சந்தை மற்றும் ஆலைகளுக்கு வரும் வாகனங்களுக்கு இந்தத் தடையை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அத்தியாவசியப் பொருள்கள் விலை மேலும் உயரும் எனத் தெரிவித்தனா். அப்போது பேசிய டிஎஸ்பி, இது தொடா்பாக உயா் அதிகாரிகளிடம் பேசி தக்க முடிவு எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.