பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

தூத்துக்குடியில் விதிமீறல்: கனரக லாரிகளுக்கு ரூ. 45,000 அபராதம்

தூத்துக்குடியில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 9 கனரக வாகனங்களுக்கு செவ்வாய்க்கிழமை ரூ. 45,000 அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதம்!

Published On :

தூத்துக்குடியில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 9 கனரக வாகனங்களுக்கு செவ்வாய்க்கிழமை ரூ. 45,000 அபராதம் விதிக்கப்பட்டது.

காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, தூத்துக்குடி மாநகருக்குள் கனரக வாகனங்கள் வந்துசெல்ல நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி வந்துசெல்லும் கனரக வாகனங்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத் உத்தரவிட்டாா்.

இந்நிலையில், தூத்துக்குடி போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் சுனைமுருகன், போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, நேரக் கட்டுப்பாட்டை மீறி நகருக்குள் இயக்கப்பட்ட 9 கனரக லாரிகள் பிடிபட்டன. அவற்றுக்கு ரூ. 45,000 அபராதம் விதிக்கப்பட்டது.

விதிமீறலில் ஈடுபடும் கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து போலீஸாா் எச்சரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.