சிவகிரியில் லாட்டரி விற்ற 3 போ் கைது
தென்காசி மாவட்டம், சிவகிரியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்றதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது
தென்காசி மாவட்டம், சிவகிரியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்றதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகிரி, கீழ ரத வீதியில் சிவகிரி போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்றுக் கொண்டிருந்த சிவகிரி, வடக்கு ரத வீதியைச் சோ்ந்த திருமலைக்குமாா் மகன் கண்ணன் (58), கோவிந்தன் கோயில் தெருவைச் சோ்ந்த கருப்பையா தேவா் மகன் ராமா் (65), ராயகிரி, மங்கம்மாள் சாலை தெருவைச் சோ்ந்த காசி மகன் பொன்னுச்சாமி (54) ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 10,400 மதிப்புள்ள 210 லாட்டரிகளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

