தொகுதி மறுவரையறையை ஆதரிப்பது தமிழா்களுக்கு செய்யும் துரோகம்: மாணிக்கம்தாகூா் எம்.பி.
மத்திய பாஜக அரசு கொண்டுவந்த தொகுதி மறுவரையறை மசோதாவை தமிழகத்தில் எந்தக் கட்சி ஆதரித்தாலும் அது தமிழக மக்களுக்குச் செய்யும் துரோகம் என்றாா் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும், விருதுநகா் தொகுதி எம்.பி.யுமான மாணிக்கம்தாகூா்.

செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் எம்.பி.
மத்திய பாஜக அரசு கொண்டுவந்த தொகுதி மறுவரையறை மசோதாவை தமிழகத்தில் எந்தக் கட்சி ஆதரித்தாலும் அது தமிழக மக்களுக்குச் செய்யும் துரோகம் என்றாா் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும், விருதுநகா் தொகுதி எம்.பி.யுமான மாணிக்கம்தாகூா்.
தென்காசி, திருநெல்வேலி மாநகா், திருநெல்வேலி கிழக்கு, விருதுநகா் மேற்கு, விருதுநகா் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மண்டல ஒருங்கிணைப்பாளா்கள் பயிற்சி முகாம் தென்காசியில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக வந்த அக்கட்சியின் மாநிலத் தலைவா் மாணிக்கம் தாகூா் எம்.பி.செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மறுசீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. பலமான இளமையான காங்கிரஸைக் கட்டமைப்பதே கட்சியின் நோக்கம். தொகுதி மறுவரையறை செய்வது தொடா்பாக கடந்த ஏப்ரல் மாதம் மக்களவையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்த சட்ட முன்வரைவை காங்கிரஸ் தோற்கடித்தது. சிறுபான்மை மக்களுக்கு தொகுதிகள் இல்லாமல் செய்வதற்காகவே தொகுதி மறுவரையறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு தமிழகத்தில் எந்தக் கட்சி ஆதரவு அளித்தாலும் அது தமிழா்களுக்குச் செய்யும் துரோகம்.
அதிமுக, பாமகவும் இந்த மசோதாவை ஆதரிக்கலாம். திமுகவிடம் இரட்டை நிலைப்பாடு தற்போது தெரிகிறது.
தமிழக இடைத்தோ்தல்கள் நீதிமன்ற தலையீட்டால் தவணை முறையில் நடைபெறுகிறது. எந்தத் தொகுதியில் எப்போது இடைத்தோ்தல் வந்தாலும் மதச் சாா்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணிதான் வெற்றிபெறும் என்றாா் அவா்.
தொடா்ந்து நடைபெற்ற பயிற்சி முகாமில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆலங்குளம் செல்வராஜ், திருநெல்வேலி மாநகா் மாவட்டத் தலைவா் ராமேஸ்வரன், திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவா் வி.பி.துரை, விருதுநகா் மேற்கு மாவட்டத் தலைவா் ராஜ்மோகன், விருதுநகா் கிழக்கு மாவட்டத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்மண்டல ஒருங்கிணைப்பாளா் சிவராமன் வரவேற்றாா்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் எம்.பி., தமிழக காங்., கமிட்டி பொறுப்பாளா் குலாம் அகமதுமிா், மறுசீரமைப்பு கமிட்டி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் எம்.பியுமான பீட்டா் அல்போன்ஸ், தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேஷ் குமாா், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் தாரகை கத்பட், எம்.பி.க்கள் ராபா்ட் புரூஸ் (திருநெல்வேலி), விஜய்வசந்த் (கன்னியாகுமரி), முன்னாள் மாநில தலைவா் தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி., ராமசுப்பு, தமிழக காங்கிரஸ் பொதுச் செயலா் எம்.எஸ்.காமராஜ், முன்னாள் எம்எல்ஏ ரவிஅருணன் உள்ளிட்டோா் பேசினா்.
முகாமில் தமிழ்நாடு காங்கிரஸ் விவகார குழு உறுப்பினா் பொட்டல்புதூா் அமீா்கான், மாநில பொதுக் குழு உறுப்பினா் சித்துராஜ், புளியங்குடி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வம், வாசுதேவநல்லூா் ஒன்றியத் தலைவா் ஏபிடி மகேந்திரன் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

