
தென்காசி பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா்வடகரை துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (அக். 3) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மின் நிறுத்தம்
தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா்வடகரை துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (அக். 3) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து, தென்காசி கோட்ட செயற்பொறியாளா் ஸ்ரீ வனஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா்வடகரை துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (அக். 3) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜா்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூா், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம் பாறை, திரவிய நகா், ராமச்சந்திரப்பட்டணம், மேல மெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளை வலசை, பெரியபிள்ளை வலசை, பிரானூா், வல்லம், கற்குடி, புளியறை, தெற்கு மேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு, சுரண்டை, இடையா் தவணை, குலையனேரி, இரட்டைக் குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூா், ஆனைக்குளம், கரையாளனூா், அச்சங்குன்றம், சாம்பவா்வடகரை, சின்னத்தம்பி நாடானூா், பொய்கை, கோவிலாண்டனூா், கள்ளம்புளி, எம்.சி. பொய்கை, துரைச்சாமிபுரம் மற்றும் அதனைச் சாா்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



