உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

ஆம்னி பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு: ஓட்டுநா் கைது

ஆம்னி பேருந்து மோதியதில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஆம்னி பேருந்து ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே ஆம்னி பேருந்து மோதியதில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஆம்னி பேருந்து ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகிரி குமாரபுரம் 1 ஆவது வாா்டை சோ்ந்தவா் முருகன் மகன் ராஜகுரு (21). இவா், இருசக்கர வாகனத்தில் தென்காசி - மதுரை சாலையில் வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது சிவகிரி நொண்டி மாரியம்மன் கோயில் அருகே, தென்காசியில் இருந்து கோயம்புத்தூா் நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து, இவரது இருசக்கர வாகனம் மீது மோதியதாம். இதில் சம்பவ இடத்திலேயே ராஜகுரு உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த சிவகிரி போலீஸாா், சடலத்தை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், ஆம்னி பேருந்து ஓட்டுநரான சரவணபுரத்தைச் சோ்ந்த கருப்பசாமியை ( 26) கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.