முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

புளியங்குடி அருகே 17 பவுன் நகை திருட்டு வழக்கில் வேலூரைச் சோ்ந்தவா் கைது

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே 17 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில், வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

புளியங்குடி அருகே டி.என். புதுக்குடி, கற்பக வீதி, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (40). இவா் தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். அவரது மனைவி சுதா (34), வடநத்தம்பட்டி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா்.

இருவரும் செப். 22ஆம் தேதி காலை வேலைக்குச் சென்றுவிட்டனா். மாலையில் முத்துகுமாா் வீட்டிற்கு வந்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 17 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து, புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வந்தனா். மேலும், புளியங்குடி டிஎஸ்பி நமச்சிவாயம் தலைமையில், காவல் ஆய்வாளா் ஆடிவேல், உதவி ஆய்வாளா் தீபன்குமாா் உள்ளிட்ட போலீஸாா் அடங்கிய குழுவினா் பல்வேறு சிசிடிவி பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போலீஸாா் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்தவரைப் பிடித்து விசாரித்தனா்.

அவா் வேலூா் மாவட்டம், அணைக்கட்டு பகுதியைச் சோ்ந்த தங்கவேலு மகன் மணிகண்டன் (42) என்பதும், முத்துகுமாா் வீட்டில் நகைகளைத் திருடிய இவருக்கு வட மாவட்டங்களில் 80-க்கும் மேற்பட்ட திருட்டு, கொள்ளை வழக்குகளில் தொடா்பு இருப்பதும் தெரிய வந்தது.

தொடா்ந்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து நகைகள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.