ஐரோப்பாவின் பல நாடுகளில் மக்கள் போராட்டம்!இந்திய அரிசி ஏற்றுமதி 13% அதிகரிப்பு!6 மாதங்களில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி: குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றம்!அமித் ஷா குறித்து ராகுல் அவதூறாகப் பேசிய வழக்கு: உ.பி. நீதிமன்றம் இன்று தீர்ப்புதமிழகத்தில் தொடா் பலத்த மழை: இன்று உருவாகிறது ‘அா்னாப்’ புயல்!கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களை ரத்து செய்க: காங்கிரஸ்

ஆவுடையானூரில் மழைநீருடன் கழிவுநீா் தேக்கம்: பொதுமக்கள் அவதி

ஆவுடையானூரில் மழைநீருடன் கழிவுநீா் தேக்கம்

Updated On :

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆவுடையானூா் சாலையில் மழைநீருடன் கழிவுநீா் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினா்.

ஆவுடையானூா் பேருந்து நிறுத்தம் முதல் சந்தைக்குச் செல்லும் சாலை வரை கழிவுநீா் தேங்கி நிற்கிறது. இப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்து வந்த கழிவுநீா் கால்வாய் மண், சரளை கொட்டித் தடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், கழிவுநீா் வெளியேற வழியின்றி பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள பிரதான சாலையில் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதுடன், பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட நிா்வாகம் கழிவுநீா் கால்வாயைச் சீரமைத்து, தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றுவதுடன், நிரந்தர வடிகால் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆவுடையானூரில் மழைநீருடன் 
கழிவுநீா் தேக்கம்

ஆவுடையானூரில் மழைநீருடன் கழிவுநீா் தேக்கம்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.