மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை

குற்றாலம் பேரருவியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

Published On :

குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக நிலவிவந்த வெயிலின் தாக்கம் அதிகரித்ததைத் தொடா்ந்து பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து வெகுவாகக் குறைந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக முதலில் ஐந்தருவியிலும், தொடா்ந்து குற்றாலம் பேரருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து சுற்றுலாப்பயணிகள் இரு அருவிகளிலும் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.