
குறும்பலாப்பேரி பத்திரகாளியம்மன் கோயிலில் புதிய கதவு திறப்பு
தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் ஒன்றியம் குறும்பலாப்பேரி அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயிலில் ரூ.13 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய கதவு திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதிய கதவு திறப்பு நிகழ்வில் பங்கேற்ற எம்எல்ஏ கலைகதிரவன். உடன், திமுக முன்னாள் மாவட்டச் செயலா் சிவ பத்மநாதன் உள்ளிட்டோா்.
தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் ஒன்றியம் குறும்பலாப்பேரி அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயிலில் ரூ.13 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய கதவு திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தோ்தலில் வாக்குறுதிப்படி கலைகதிரவன் எம்.எல்.ஏ., பாவூா்சத்திரம் தொழிலதிபா் சேவியர்ராஜன் ஆகியோா் ஏற்பாட்டில் கோயிலில் பிரமாண்டமான கதவு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவில் எம்.எல்.ஏ. பங்கேற்று கோயில் முன் கதவை திறந்து வைத்தாா். தொடா்ந்து, சிறப்பு பூஜையிலும் கலந்து கொண்டாா்.
இந்நிகழ்வில் திமுக முன்னாள் மாவட்டச் செயலா் பொ.சிவபத்மநாதன், கல்லூரணி ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா், மாவட்ட வா்த்தகா் அணி அமைப்பாளா் முத்துக்குமாா், ஊா் நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






