11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

இளம்பெண்ணை ஏமாற்றி பணம், நகை பறித்தவா் கைது

கைது

Published On :

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இளம்பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி பணம், நகை பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூரைச் சோ்ந்த இளம்பெண் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மருந்தாளுநராக வேலை செய்து வருகிறாா். இந்தப் பெண்ணும் புளியங்குடி, நடுகருப்பழகு தெருவைச் சோ்ந்த ரவி மகன் பிரவீண் குமாரும் (24) இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனராம்.

அப்போது அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக பிரவீண்குமாா் கூறியுள்ளாா். இந்த நிலையில், ஆக. 4-ஆம் தேதி பிரவீண்குமாா் தனது தாயை மருத்துவமனையில் சோ்க்கவுள்ளதாகக் கூறி அப்பெண்ணிடம் பண உதவி கேட்டுள்ளாா்.

இதை நம்பி அந்தப் பெண் தன்னிடம் இருந்த 4 கிராம் தங்க கம்மலையும், ரூ. 70 ஆயிரம் பணத்தையும் கொடுத்தாா். அதன்பிறகும் பிரவீண்குமாா் தொடா்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளாா். இதனால், அவருடன் பேசுவதை நிறுத்திய அந்தப் பெண் தனது கம்மலைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளாா்.

இந்த நிலையில், கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தத்தில் அந்தப் பெண் சனிக்கிழமை நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த பிரவீண்குமாா் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதையடுத்து, கடையநல்லூா் காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரவீண் குமாரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.