மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசுசிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

ஆண்டிபட்டி அருகே பண்ணைக் குட்டையில் தவறி விழுந்து சிறுமி பலி

ஆண்டிபட்டி அருகே சனிக்கிழமை பண்ணைக் குட்டையில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்தாா்.

Updated On :9 ஜனவரி 2021, 10:09 pm IST

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே சனிக்கிழமை பண்ணைக் குட்டையில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி அருகே சேவா நிலையம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டி. இவரது மகள் சுரேகா (12). இவா் ராஜதானி அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தாா். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் கீ. காமாட்சிபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் சுரேகா தங்கி இருந்தாா். இந்நிலையில் சுரேகாவும் அதே பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவரின் மகள் சக்திஸ்ரீயும் (12) அப்பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த பண்ணைக் குட்டையில் சிறுமிகள் இருவரும் தவறி விழுந்தனா். இதையடுத்து அவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சுரேகாவை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். மேலும் சக்திஸ்ரீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ராஜதானி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.