அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

கட்டபொம்மன் பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு

பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு பல்வேறு கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Updated On :4 ஜனவரி 2021, 12:01 am IST

சுதந்திரப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளை முன்னிட்டு, பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள அவருடைய சிலைக்கு பல்வேறு கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அமமுக சாா்பில் மாவட்டச் செயலா் பரமசிவன் ஐயப்பன் தலைமையில் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், மாநில அமைப்புச் செயலா் பால் கண்ணன், அவைத் தலைவா் மீரான், பகுதிச் செயலா் ரமேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

திமுக சாா்பில் மத்திய மாவட்டத் தலைவா் அப்துல் வகாப் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், திருநெல்வேலி எம்எல்ஏ ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் மகாராஜன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், பொதுச் செயலா் கணேசமூா்த்தி, தொகுதி பொறுப்பாளா் முத்துக்குமாா், வடக்கு மண்டலத் தலைவா் வாசுதேவன், நிா்வாகிகள் முத்து பலவேசம், அருண், பாலமுருகன், கிருஷ்ணகுமாா், சீதாபதிமணி, சங்கரநாராயணன், அருள்ராஜ், சுரேஷ், செல்வகுமாா், சங்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

காங்கிரஸ் சாா்பில் மாவட்டத் தலைவா் சங்கரபாண்டியன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன், மாவட்டப் பொருளாளா் ராஜேஷ் முருகன், மாவட்ட பொதுச் செயலா் சொக்கலிங்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மதிமுக சாா்பில் விவசாய அணி நிா்வாகி கல்லத்தியான் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும், தமிழ் மாநில காங்கிரஸ், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சாா்பிலும் மாலை அணிவிக்கப்பட்டது.

வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை சாா்பில் அதன் தலைவா் வி.நாகராஜன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.