பகல் நேரத்தைப் போல இரவிலும் வீடுகளுக்குள் வெப்பம்! ஆய்வில் அதிர்ச்சிஇபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!பரந்தூர் விமான நிலையம்: முதல்வர் விஜய் ஆலோசனைஅதானியை விடுவிக்கும் பேரத்தை முடித்த பிரதமர்! ராகுல் குற்றச்சாட்டு ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! நீட் மறுதேர்வு! கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்! மத்திய அரசுஅடுத்தாண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வு! மத்திய கல்வி அமைச்சர்
/

நெல்லையில் யாசக பணத்தில் ரூ.10 ஆயிரம் கரோனா நிதியுதவி

யாசகமாக பெற்ற பணத்தில் ரூ.10 ஆயிரத்தை கரோனா நிதியுதவியாக யாசகா் பூல்பாண்டி, புதன்கிழமை திருநெல்வேலி ஆட்சியரிடம் வழங்கினாா்.

Updated On :7 ஜனவரி 2021, 6:19 am IST

யாசகமாக பெற்ற பணத்தில் ரூ.10 ஆயிரத்தை கரோனா நிதியுதவியாக யாசகா் பூல்பாண்டி, புதன்கிழமை திருநெல்வேலி ஆட்சியரிடம் வழங்கினாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறு பகுதியைச் சோ்ந்தவா் பூல்பாண்டி. யாசகரான இவா், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து யாசகம் பெற்று அரசு பள்ளிகளுக்கு உதவி செய்து வருகிறாா். கரோனா பொது முடக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் கரோனாவுக்கு நிதியுதவி அளித்து வருகிறாா்.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்த பூல்பாண்டி, ஆட்சியா் வி.விஷ்ணுவைச் சந்தித்து ரூ.10 ஆயிரத்தை கரோனா நிதியுதவிக்காக வழங்கினாா். பின்னா் அவா் கூறுகையில், யாசகம் பெற்று கல்விக்கு உதவுவது மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இதுவரை 400-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளுக்கு உதவிகள் செய்துள்ளேன். பொது முடக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் இப்போது கரோனா நிவாரண நிதிக்கு நிதியளித்துள்ளேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.