தமிழக ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு! திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!முதல்வர் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்த பரந்தூர் விவசாயிகள்! தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!

இவி-கார்களுக்கு மே மாத தள்ளுபடி அறிவித்த டாடா! நெக்ஸான், பஞ்ச் கார்களுக்கும்!

மே மாதத்தில் இவி-கார்களுக்கு தள்ளுபடி அறிவித்திருக்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட் மற்றும் டாடா பயணிகள் எலக்ட்ரிக் மொபிலிட்டி ஆகியவற்றின் நிர்வாக இயக்குநரான சைலேஷ் சந்திரா, புதிய எஸ்யூவியான நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தினார்.

டாடா மோட்டார்ஸ் - TATA X

Published On :22 மே 2026, 12:04 pm IST

டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது 2026 மே மாதத்துக்கு, தன்னுடைய மின்சாரத்தில் இயங்கும் கார்களுக்கு மிகப்பெரிய சலுகைகளை அறிவித்துள்ளது.

ஆல்ட்ரோஸ் ப்ரீமியம் வகை கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் வரை சலுகை வழங்கப்படுகிறது. அதாவது, டாடா நிறுவனத்தின் மின் கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.3.8 லட்சம் வரை விலையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதாவது, க்ரீன் போனஸ், பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்கும்போது, டாடாவின் பழைய மின் வாகனத்தைக் கொடுத்து புதிய மின் வாகனம் வாங்குவது அல்லது எரிபொருளில் இயங்கும் வாகனத்தைக் கொடுத்து மின் வாகனத்தை வாங்கும்போது என ஒட்டுமொத்தமாக மொத்த விலையில் ஒன்று முதல் 3 லட்சம் வரை விலையில் சலுகை வழங்கப்படுகிறது.

டியாகோ, பஞ்ச், நெக்ஸான், கர்வ், ஹாரியர் போன்ற மின் வாகனங்களுக்கு வாங்குபவரின் வசதிக்கு ஏற்ப சலுகைகளைப் பெறலாம்.

மே 2026 மாதத்தில், டாடா மின்சார வாகனங்களிலேயே மிகக் குறைந்த தள்ளுபடி நெக்ஸான் EV-க்கு வழங்கப்படுகிறது. இது MY24 மற்றும் MY25 மாடல்களுக்கு, அனைத்து வேரியண்ட்கள் மற்றும் பேட்டரி ஆப்ஷன்களிலும் ரூ. 1.2 லட்சம் வரை கிடைக்கிறது.

அடுத்த இடத்தில் இருப்பது ஹாரியர் EV. இதற்கு ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது MY25 மற்றும் MY26 மாடல்களுக்கு, அனைத்து வேரியண்ட்கள் மற்றும் பேட்டரி ஆப்ஷன்களிலும் ரூ. 1.5 லட்சம் வரை கிடைக்கிறது.

டாடா மின்சார வாகனமான டியாகோ EV-க்கு ரூ.2.1 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது MY24 மற்றும் MY25 மாடல்களுக்கு, குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த மே மாதத்தில், டாடா மின்சார வாகனங்களில் பஞ்ச் EV-க்கு ரூ.2.1 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது MY24 மற்றும் MY25 மாடல்களுக்கு, அனைத்து வேரியண்ட்களுக்கும் வழங்கப்படுகிறது.

அதிகபட்சமாக கர்வ் EV வகை காருக்கு ரூ.3.8 லட்சம் தள்ளுபடி கிடைக்கும். டாடாவின் அதிக விலையுள்ள கார்களில் ஒன்றாக கர்வ் கார்களில் MY24 மற்றும் MY25 மாடல்களுக்கும், 45 வேரியண்ட்களுக்கு ரூ.3.3 லட்சமும், மற்ற வேரியண்ட்களுக்கு ரூ.3.8 லட்சமும் தள்ளுபடி கிடைக்குமாம்.

Summary

Tata Motors has announced discounts on EVs in May.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.