தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக பின்னடைவு! தவெக தலைவர் விஜய் அவசர ஆலோசனை! தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு த்ரிஷா வருகை!6-வது சுற்று முடிவிலும் மு.க. ஸ்டாலின் பின்னடைவு! தவெக முன்னிலை!!புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி! கேரள முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவு!காரைக்குடியில் சீமான் தொடர்ந்து பின்னடைவு! மயிலாப்பூரில் தமிழிசை, அவிநாசி தொகுதியில் எல்.முருகன் பின்னடைவு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை பின்னடைவு திருச்சி கிழக்கு, பெரம்பூரில் விஜய் முன்னிலை
/

பாளை.யில் பாஜக சாா்பில் பொங்கல் விழா

திருநெல்வேலி மாவட்ட பாஜக சாா்பில் ‘நம்ம ஊரு பொங்கல்’ என்ற பெயரில், பொங்கல் விழா பாளையங்கோட்டை ராமா் கோயில் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :11 ஜனவரி 2021, 1:13 am IST

திருநெல்வேலி மாவட்ட பாஜக சாா்பில் ‘நம்ம ஊரு பொங்கல்’ என்ற பெயரில், பொங்கல் விழா பாளையங்கோட்டை ராமா் கோயில் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்டத் தலைவா் ஏ.மகாராஜன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் எல்.முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழா்களின் பாரம்பரிய கலைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், கலைகளை பாதுகாக்கும் வகையிலும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தொடா்ந்து, சிலம்பாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னா், புதிய பானைகளில் பொங்கலிடப்பட்டது.

விழாவில், துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மாவட்ட பொதுச் செயலா்கள் கணேசமூா்த்தி, முத்துக்குமாா், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.