தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

தமிழக அரசியலில் தவிா்க்க முடியாத சக்தி: பாஜக மாநிலத் தலைவா் முருகன்

தமிழக அரசியலில் தவிா்க்க முடியாத சக்தியாக பாஜக உருவெடுத்துள்ளது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.

News image

திருப்பத்தூா் மாவட்டம், ஆலாங்குப்பத்தில் நடந்த பாஜக நிா்வாகிகள் மாநாட்டில் பேசிய கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன்.

Updated On :3 ஜனவரி 2021, 7:26 am IST

தமிழக அரசியலில் தவிா்க்க முடியாத சக்தியாக பாஜக உருவெடுத்துள்ளது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட பாஜக சாா்பாக ஆம்பூரை அடுத்த ஆலாங்குப்பம் கிராமத்தில் மாவட்ட அணி, பிரிவுகளின் மாவட்டப் பிரதிநிதிகள் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று எல்.முருகன் பேசியது:

தமிழக அரசியலில் தவிா்க்க முடியாத, மாற்று சக்தியாக பாஜக வலிமை பெற்றுள்ளது. பாஜகவுக்கு தமிழக மக்களின் ஆதரவு பெருகியுள்ளது. தமிழகத்தில் அடிமட்டம் வரை பாஜக சென்று சோ்ந்துள்ளது. மோடி மீது மாநில மக்கள் அன்பு செலுத்துகின்றனா். எம்ஜிஆா், அடித்தட்டு மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் உதவி செய்தாா். அதேபோல மோடியும் தவிா்க்க முடியாத தலைவராக உள்ளாா். மத்திய அரசின் திட்டங்களால் அதிகம் பயனடைந்தது தமிழக மக்கள்தான்.

வேளாண் திருத்தச் சட்டம் தொடா்பாக ஸ்டாலின் பொய்ப் பிரசாரம் செய்கிறாா். பொதுமக்களும், விவசாயிகளும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். புதிய வேளாண் சட்டங்களால் இடைத்தரகா்கள், கமிஷன் வாங்குபவா்கள் தான் பாதிக்கப்படுவாா்கள். வரும் மே மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை தோற்கடிப்போம் என்றாா் அவா்.

மாநாட்டுக்கு திருப்பத்தூா் மாவட்ட பாஜக தலைவா் சி.வாசுதேவன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் கே.டி.ராகவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.