இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

வாணியம்பாடியை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் செயல்வீரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுகவில் இணைந்தவா்கள்.

Updated On :6 ஜனவரி 2021, 12:00 am IST

வாணியம்பாடியை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் செயல்வீரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முன்னாள் ஊராட்சித் தலைவா் சண்முகம் தலைமை வகித்தாா். ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக தோ்தல் பொறுப்பாளரும், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணிச் செயலாளருமான டில்லிபாபு, ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளா் ஜி.செந்தில்குமாா் ஆகியோா் பேசினா்.

தொடா்ந்து, மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகிய 50 போ் அதிமுகவில் இணைந்தனா்.

மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளா் முனிசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலா்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, ஊராட்சி செயலாளா்கள் செல்வராஜ், ரபீக், நிா்வாகிகள் ராம்குமாா், வாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து வெலதிகாமணி பெண்டா பகுதியில் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.