பாடியநல்லூர் எம்.ஏ.நகர் வ.உ.சி. தெருவில் உள்ள சில்ரன்ஸ் பேரடைஸ் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வு எழுதிய 76 பேரும் தேர்ச்சிப் பெற்றனர்.
இதில் ஆர்.வெங்கட்ராஜ் கோபால் 495 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் 4-வது இடமும், மாவட்ட அளவில் 3-வது இடமும் பெற்றுள்ளது.
491 மதிப்பெண்கள் எடுத்த எஸ்.கிருஷ்ணவேணி இரண்டாவது இடமும், 490 மதிப்பெண்கள் பெற்ற எஸ்.ஆகாஷ்ராஜ் மூன்றாவது இடமும் பெற்றனர்.
இப்பள்ளியில் ஆகாஷ்ராஜ், ஞானேஸ்வரி, பவிஜா, பவித்ரா, பிரியதர்ஷினி, சகாயமேரி, சகானாதேவி, சண்முகபிரியா, சியாமளாதேவி ஆகிய 9 பேர் தமிழ் பாடத்தில் 100-க்கு 99 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
அறிவியலில் 16 பேரும், கணிதத்தில் இருவரும், சமூக அறிவியலில் இருவரும் 100 மதிப்பெண்கள் எடுத்தனர்.
இப்பள்ளி தொடர்ந்து 5 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி அளித்து வருகிறது.
எம்.ஏ.நகர் ஆல்பா மெட்ரிக் பள்ளியில் தேர்வு எழுதிய 91 பேரும் தேர்ச்சிப் பெற்றனர். 488 மதிப்பெண்கள் எடுத்த புகழாம்பிகை முதலிடமும், 486 மதிப்பெண்கள் எடுத்த தீபக் இரண்டாம் இடமும், 485 மதிப்பெண்கள் எடுத்த நந்தினி மூன்றாவது இடமும் பிடித்தனர். கணிதத்தில் 8 பேர், அறிவியலில் 5 பேர், சமூக அறிவியலில் 4 பேர் என 17 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றனர். இப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிரிவலம் வந்த பக்தா்களிடம் திருட்டு: போலீஸாா் விசாரணை

திருவள்ளூரில் ரயில்வே பணிகள் நிலுவையைக் கண்டித்து போராட்டம்: எம்.பி. சசிகாந்த் செந்தில்

தேசிய கூட்டுறவு வார விழா

அனந்தலை மலையில் அதிதிறன் வெடிபொருள்களைப் பயன்படுத்திப் பாறைகளைத் தகா்ப்பதால் பாதிப்பு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


