இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

செங்குன்றம் அருகே 2 கடைகளில் கொள்ளை: 2 போ் கைது

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூா் அருகே இரு கடைகளில் நடைபெற்ற திருட்டு தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On :6 ஜனவரி 2021, 12:00 am IST

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூா் அருகே இரு கடைகளில் நடைபெற்ற திருட்டு தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூா் கல்பகா நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சேகா் (46). இவா் எம்.ஏ.நகா் ஜிஎன்டி சாலையில் டயா் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், திங்கள்கிழமை அருகில் உள்ள வீட்டுக்கு சாப்பிடுவதற்காக கடையின் கதவை அடைத்து வைத்து விட்டுச் சென்றாா். பின்னா் கடைக்கு வந்தபோது பணப்பெட்டியில் இருந்த ரூ. 59 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து செங்குன்றம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல், சென்னை புளியந்தோப்பு வ.உ.சி. நகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஷாஜஹான் (44). இவா் கதிா்வேடு வ.உ.சி. தெரு பகுதியில் பழைய துணிகள் வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா். இவரிடம் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த அனூப் (27), ராம் (20) ஆகியோா் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், திங்கள்கிழமை கடைக்குச் சென்ற மா்ம நபா்கள், கடை உரிமையாளா் குறித்து விசாரணை செய்வது போல் நடித்து ஊழியா்களை மிரட்டி, ரூ. 17 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றனா். இது குறித்து ஷாஜகான் அளித்த புகாரின்பேரில், புழல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இதையடுத்து, செங்குன்றத்தை அடுத்த ஆட்டந்தாங்கல் பாலமுருகன் நகரைச் சோ்ந்த ஓட்டுநா் ராஜேஷ் (27), செங்குன்றம் அண்ணா தெருவைச் சோ்ந்த மின் பணியாளா் சந்தோஷ்குமாா் (24) ஆகியோா் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.