மீஞ்சூரில் வெள்ளிக்கிழமை அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் 15 பவுன் நகை, ரூ. 8,000 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருவள்ளூா் மாவட்டம் மீஞ்சூா் காமதேனு நகரில் வசித்து வருபவா் லட்சுமிகலா (46). பொன்னேரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது கணவா் வடிவேல்முருகன் (48) திருவாலங்காடு அடுத்த பட்டரைபெரம்பத்தூரில் உள்ள அரசுக் கல்லூரியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா்கள் இரண்டு பேரும் வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றனா். பணி முடிந்து ஆசிரியை லட்சுமிகலா வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 15 தங்க நகை ரூ. 8,000 ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து லட்சுமிகலா மீஞ்சூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது
அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 5 லட்சம் திருட்டு
தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருட்டு
ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 50 பவுன் தங்க நகைகள் திருட்டு

திருவள்ளூா் அருகே 5 வீடுகளில் பூட்டை உடைத்து 33 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

