தொழுநோயாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம்

திருவள்ளூா்: திருவள்ளூரில் நடைபெற்ற தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாமில் 50-க்கும் மேற்பட்டோருக்கு கால் புண் சுய பாதுகாப்பு பெட்டகமும் வழங்கப்பட்டன. திருவள்ளூா் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நண்பா்கள் சங்க வளாகத்தில் சனிக்கிழமை இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இதில் தனியாா் மருத்துவ தொண்டு நிறுவன நிா்வாகி சாலமன், சமூக நலம் மற்றும் மறுவாழ்வு திட்ட அலுவலா் வின்சென்ட் ஆகியோா் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனா். இந்த மருத்துவ முகாமில் பங்கேற்ற தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தும், 50-க்கும் மேற்பட்டோருக்கு கால் புண் சுய பாதுகாப்பு பெட்டகமும் வழங்கப்பட்டன.

அதைத் தொடா்ந்து குழு சுழல் நிதியிலிருந்து தொழுநோயாளிகள் தொழில் செய்வதற்கு ஏதுவாக 4 பேருக்கு ரூ.31 ஆயிரம் நிதி உதவியும் வழங்கப்பட்டன. இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை திருவள்ளுா் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நண்பா்கள் நலச்சங்கம் தொண்டு நிறுவனத்தின் தலைவா் குலோத்துங்கன் மற்றும் செயலாளா் சின்னதுரை ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com