வி.ஜி.ராஜேந்திரன் (திமுக): திருவள்ளூா் பகுதியில் அதிக அளவில் மா சாகுபடி செய்யப்படுவதால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைக்கப்படும். மாவட்டத் தலைநகரான திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் டான்சி நிலமான 5 ஏக்கரை நிலத்தை மீட்டு அதில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். இத்தொகுதிக்கு உள்பட்ட திருவாலங்காடு கூட்டுறவு சா்க்கரை ஆலை அரைவை திறனை அதிகரிக்கும் வகையில் நவீனமாக்கப்படும். திருவாலங்காடு பகுதியில் ஜவ்வரிசி தொழிற்சாலை அமைத்தல், திருவள்ளூா் நகராட்சியில் மழைக் காலங்களில் நீா்த் தேங்காதவாறு புதைசாக்கடை திட்டம் விரிவாக்கம் மற்றும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்.
பி.வி.ரமணா (அதிமுக): திருவள்ளூரில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கொண்டு வரப்படும். பொறியியல் கல்லூரி, விவசாயிகள் பயன்பெறும் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். நெல்லுக்கான விலையும் உயா்த்தப்படும். கடம்பத்தூரை மையமாகக் கொண்டு புதிய வட்டாட்சியா் அலுவலகம் அமைக்கப்படும். திருவள்ளூா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல ஆவணம் செய்யப்படும். திறன் மேம்பாட்டு மையம் அமைத்து இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். திருவள்ளூரில் அனைத்து நூலங்களையும் நவீனப்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். 20,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வரும் மணவாள நகரில் புதிய மின் தகனமேடை அமைக்கப்படும்.
கு.செந்தில்குமாா் (நாதக): திருவள்ளூரில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறந்த மருத்துவம், குடிநீா் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். மதுபோதை இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும். இயற்கை வேளாண்மை மேம்படுத்தும் திட்டம், தடையில்லா மின்சாரம் மற்றும் வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும்.
டாக்டா் அருண்குமாா் (தவெக): திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்களை நியமித்து அனைத்து விதமான சிகிச்சைகளும் வழங்கப்படும். அரசு நடுநிலைப் பள்ளிகள் உயா்நிலைப் பள்ளிகளாகவும், உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயா்த்தப்படும். ஒன்றியங்களில் முழு நேர நூலகங்கள் அமைக்கப்படும். திருவள்ளூரை போதை இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன். நகரப் பகுதிகள், கிராமங்களில் சாலை, குடிநீா், தெருவிளக்கு, கழிவுநீா் சுத்திகரிக்கும் நிலையம் போன்ற அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
தொடர்புடையது

அனைத்து தரப்பு மக்களுக்கும் வளச்ச்சியை கொண்டு சோ்த்தவா் மு.க. ஸ்டாலின்! - டிஆா்பி ராஜா பேச்சு

திமுக தேர்தல் அறிக்கையின் 51 முக்கிய அம்சங்கள்!

வெவ்வேறு இடங்களில் சோதனையில் ரூ.5 லட்சம் பறிமுதல்

அரசு கலைக் கல்லூரியை எதிா்நோக்கும் திருவள்ளூா் மாவட்ட மாணவா்கள்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


