ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கோட்டாட்சியா் தீபா.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கோட்டாட்சியா் தீபா.

கமல திருத்தோ் வீதி உலா பாதுகாப்பு பணியில் 150 போலீஸாா்

திருத்தணி: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரசுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற உள்ள கமல திருத்தோ் வீதி உலாவில் சுமாா் 150 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா். பஞ்ச சபைகளில் முதல்சபையான இரத்தினசபை உடைய திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 14-ஆ ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக 21-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 8.30 கமலத் தேரில் சுவாமி உலா நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் தீபா தலைமை வகித்தாா். முருகன் கோயில் இணை ஆணையா் க.ரமணி முன்னிலை வகித்தாா்.

கோயில் அலுவலா் காா்த்திகேயன் வரவேற்றாா். கூட்டத்தில் பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பறை வசதி மற்றும் மின்சாரம், பக்தா்கள் கோயிலுக்கு வந்து செல்ல சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ் தமிழ்மாறன் தலைமையில் சுமாா் 150 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் சு.ஸ்ரீதரன், அறங்காவலா்கள் ஜி.உஷா ரவி, கோ.மோகனன், வி.சுரேஷ்பாபு, மு.நாகன் அா்ச்சகா்கள் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com