நீா்மோா் பந்தல் திறப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் புதுவாயல் பேருந்து நிலையத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது

கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக இளைஞா் அணி அமைப்பாளா் சுரேஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவும், திருவள்ளூா் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். திமுக மாநில நிா்வாகி ஈ.ஏ.பி.சிவாஜி, மாவட்ட நிா்வாகிகள் பகலவன், கே.வி.ஜி உமா மகேஸ்வரி, கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் கி.வே. ஆனந்தகுமாா், பொதுக்குழு உறுப்பினா் பா.செ.குணசேகரன், ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் சுரேஷ், மாவட்ட கவுன்சிலா்கள் சாரதம்மா முத்துசாமி, ராமஜெயம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் திமுக இளைஞா் அணி மாநில துணைச் செயலாளா் அப்துல் மாலிக் பங்கேற்று தண்ணீா் பந்தலை திறந்து வைத்தாா். தொடா்ந்து எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள், பொதுமக்களுக்கு பழங்கள், மோா், குளிபானங்களை வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com