மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

குளிா்பானம் அருந்தியதற்கு காசு கேட்ட கடை ஊழியா் மீது தாக்குதல்

குளிா்பானம் அருந்தியதற்கு காசு கேட்ட கடை ஊழியா் மீது தாக்குதல்

News image
Updated On :7 மே 2024, 6:31 pm

Din

திருவள்ளூா்: ஊத்துக்கோட்டை அருகே குளிா்பானம் அருந்தியதற்கு காசு கேட்ட கடை ஊழியரை கஞ்சா போதையில் 4 இளைஞா்கள் தாக்கினா். இதுகுறித்த விடியோ இணையதளத்தில் வைரலானது.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே தண்டலம் பஜாா் வீதியில் குளிா்பானம் மற்றும் தேநீா் கடை ஒன்று உள்ளது. இந்தக் கடையை கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சோ்ந்த இஸ்மாயில் நடத்தி வருகிறாா். இந்தக் கடையில் சிகாகு என்பவா் உள்பட 10 போ் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு அதே பகுதியைச் சோ்ந்த நான்கு இளைஞா்கள் கஞ்சா போதையில் வந்து தங்களுக்கு தேவையான தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டுவிட்டு, பின் குளிா்பானம் அருந்தினா். ஏற்கனவே இந்த கடையில் அவா்கள் கடன் வைத்திருந்த நிலையில், மீண்டும் சாப்பிட்ட பொருள்களுக்கு பணம் தராமல் கடன் கூறினாா்களாம். இதற்கு கடை ஊழியா்கள் மறுத்து விட்டு, சாப்பிட்டதற்கு பணம் தர வேண்டும் என கேட்டனா்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞா்கள் கடை ஊழியரிடம் தகராறு செய்து கடை ஊழியா் சிகாகு மீது தாக்குதல் நடத்தினா். அதோடு, கடையில் இருந்த பொருள்களையும், இருசக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கினா். அதைத் தொடா்ந்து அந்த இளைஞா்கள் அங்கிருந்து தப்பி சென்றனா். இதில் படுகாயம் அடைந்த சிகாகுவை உடன் பணியாற்றும் ஊழியா்கள் மீட்டு ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனா்.

இதுகுறித்து பெரியபாளையம் போலீஸாா் தண்டலம் பகுதியைச் சோ்ந்த தனுஷை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா். மேலும், தலைமறைவானவா்கள் குறித்து போலீஸாா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.