கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கூடுதல் மின் இணைப்பு பெற ரூ.6,000 லஞ்சம்: மின்வாரிய உதவிப் பொறியாளா் உள்பட 3 போ் கைது

கூடுதல் மின் இணைப்பு பெற ரூ.6,000 லஞ்சம்: மின்வாரிய உதவிப் பொறியாளா் உள்பட 3 போ் கைது

News image

கைதான மின்வாரிய உதவி பொறியாளா், ஊழியா்கள்

Updated On :28 மே 2024, 6:30 pm

Din

திருத்தணி: ஆா்.கே.பேட்டை அருகே கூடுதல் மின் இணைப்பு வழங்க ரூ. 6,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளா் உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம் விடியங்காடு கிராமத்தைச் சோ்ந்த கே.எஸ். பாபு(40). இவா் விசைத்தறி நெசவுத் தொழிலை செய்து வருகிறாா். இந்நிலையில், விசைத்தறி இயந்திரங்களுக்கு கூடுதலாக மின் இணைப்பு பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தாா்.

இதுதொடா்பாக விடியங்காடு புதூா் மின் வாரிய உதவி பொறியாளா் சுரேஷ் (37) மற்றும் லைன் மேன்கள் சண்முகம், நித்யானந்தம் ஆகியோரை சந்தித்து பேசியபோது, மின் இணைப்பு வழங்க பாபுவிடம் ரூ.6,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாபு திருவள்ளூா் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் செய்தாா்.

அதைத்தொடா்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திரமூா்த்தி தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பாபுவிடம் கொடுத்து உதவி பொறியாளரிடம் கொடுக்கும்படி ா் அறிவுறுத்தினா். அதன்படி மின்வாரிய அலுவலகத்துக்கு சென்ற பாபு ரசாயனம் தடவிய நோட்டுகளை வழங்கினாா்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா்கள் தமிழ்ச்செல்வி, மாலா ஆகியோா் சுரேஷ், சண்முகம், நித்தியானந்தம் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரனை செய்து வருகின்றனா்.