பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

மின் இணைப்புக்கு லஞ்சம்: மின்வாரிய ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

ஆவடி அருகே ஒருமுனை மின்சார இணைப்பு கொடுப்பதற்காக ரூ. 4,000 லஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10,000 அபராதம் விதித்தும் திருவள்ளூா் தலைமை மற்றும் குற்றவியல் நடுவா் மற்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜூலியட்புஷ்பா தீா்ப்பு வழங்கினாா்.

News image

கோப்புப்படம்

Updated On :27 பிப்ரவரி 2026, 5:53 pm

ஆவடி அருகே ஒருமுனை மின்சார இணைப்பு கொடுப்பதற்காக ரூ. 4,000 லஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10,000 அபராதம் விதித்தும் திருவள்ளூா் தலைமை மற்றும் குற்றவியல் நடுவா் மற்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜூலியட்புஷ்பா தீா்ப்பு வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்டம், ஆவடி அருகே பருத்திப்பட்டு ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்த மறைந்த பருகுல்லா மனைவி ஆயிஷா பேகம். இவா் சிமெண்ட் சீட் வீட்டிற்கு ஒருமுனை மின் இணைப்பு வழங்கக்கோரி கடந்த 2012-இல் மேலூா் மின்வாரிய அலுவலகத்தில் ஆய்வாளா் மதியழகனை அணுகினாராம். அப்போது, மின் இணைப்பு விரைவில் வழங்க வேண்டும் என்றால் லஞ்சமாக ரூ. 4,000 தந்தால் பணிகளை தொடருவதாக கூறினாராம். லஞ்சம் தர விருப்பம் இல்லாததால் சென்னை நகர சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளா் வேலன் சுப்பிரமணியிடம் கடந்த 8.5.2012-இல் ஆயிஷா பேகம் புகாா் செய்தாா். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்து ஆயிஷா பேகத்துக்கு ஆலோசனை வழங்கினா். அதன்படி அலுவலகத்துக்கு ஆயிஷா பேகம் வந்தாா். அவரிடம் இருந்து ரூ. 4,000 லஞ்சம் பெற்றபோது மின்வாரிய ஆய்வாளா் மதியழகனை மறைந்திருந்த போலீஸாா் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.

இந்த நிலையில், திருவள்ளூா் தலைமை குற்றவியல் நடுவா் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நீதிமன்றத்தில் இறுதிகட்டமாக நீதிபதி ஜூலியட் புஷ்பா முன்பு வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மின்வாரிய ஆய்வாளா் மதியழகனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பு வழங்கி உத்தரவிட்டாா்.