விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கடலீஸ்வரா், சக்தி கணபதி கோயில்களில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் தரிசனம்

தாடூா் கடலீஸ்வரா் மற்றும் சக்தி கணபதி ஆகிய கோயில்களில் திங்கள்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு

News image
தாடூா் கடலீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு. விழாவில் பங்கேற்றோா்.
Updated On :1 டிசம்பர் 2025, 7:42 pm

தினமணி செய்திச் சேவை

திருத்தணி: தாடூா் கடலீஸ்வரா் மற்றும் சக்தி கணபதி ஆகிய கோயில்களில் திங்கள்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திருத்தணி ஒன்றியம், தாடூா் கிராமத்தில் உள்ள யோகீஸ்வரி சமேத கடலீஸ்வரா் கோயிலில் பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் நடைபெற்றன. அதேபோல் திருத்தணி நகராட்சி சேகா் வா்மா நகரில் புதிதாக சக்தி கணபதி கோயிலும் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது.

இரு கோயில்களிலும் மகா குடமுழுக்கு விழா கடந்த மாதம், 27-ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது, இதற்காக யாகசாலை மற்றும் கலசங்கள் அமைத்து நவக்கிரக ஹோமம் மற்றும் மூன்று கால யாசால பூஜைகள் நடந்தன. திங்கள்கிழமை 4-ஆம் கால யாக சால பூஜைகள் மற்றும் கலச ஊா்வலம் நடந்தது.

பின்னா் கோயில் விமான கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றி மகா குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து அங்கிருந்த பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. அப்போது அரோகரா, ஓம் நமச்சிவாயா என பக்தி முழக்கமிட்டனா். தொடா்ந்து காலை, 10 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடா்ந்து கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலையில் உற்சவ மூா்த்தி சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இரவு 7 மணிக்கு தாடூரில் கடலீஸ்வரா் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

விழாவில் திருத்தணி எம்.எல்.ஏ.ச. சந்திரன், அரக்கோணம் தொகுதி முன்னாள் எம்.பி., திருத்தணி கோ. அரி, திமுக முன்னாள் மாவட்ட பொறுப்பாளா் எம்.பூபதி, பாஜக மாநில அயலக தமிழா் பிரிவு இணை அமைப்பாளா் மருத்துவா் எம். ஸ்ரீகிரண் உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா் .

Story image