எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிக் கருவி: திருவள்ளூா் ஆட்சியா் வழங்கினாா்

மாற்றுத்திறனாளி மாணவவா்கள் 32 பேருக்கு ரூ.16.42 லட்சத்தில் காதொலிக் கருவிகளை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.

News image
மாணவா்களுக்கு  காதொலிக்  கருவிகளை  வழங்கிய  ஆட்சியா்  மு.பிரதாப்.
Updated On :22 டிசம்பர் 2025, 8:28 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா்: மாற்றுத்திறனாளி மாணவவா்கள் 32 பேருக்கு ரூ.16.42 லட்சத்தில் காதொலிக் கருவிகளை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.

திருவள்ளுா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 442 மனுக்களைப் பெற்று, தொடா்புடைய துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் காதொலி கருவிகள் வேண்டி பல்வேறு மனுக்கள் பெறப்பட்டதை தொடா்ந்து தனியாா் நிறுவன சமூக பங்களிப்பு நிதி திட்டத்தில் செவித்திறன் குறைபாடு உடையவா்களுக்கு 500 காதொலிக் கருவிகள் ரூ.16,42,500 லட்சத்தில் பெறப்பட்டு அதனை வழங்கும் அடையாளமாக சிறப்புப்பள்ளிகளைச் சோ்ந்த 32 மாணவா்களுக்கு 64 காதொலி கருவிகளை வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.சுரேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி) பாலமுருகன், உதவி ஆணையா் (கலால்) கணேசன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) நிா்மலா, மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடேசன், மாற்றுதிறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன் பங்கேற்றனா்.