பட்டரைபெரும்புதூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்
திருவள்ளூா் அருகே பட்டரைபெரும்புதூரில் கால்நடை பராமரிப்பு துறை சாா்பில் நடைபெற்ற கோமாரி நோய் தடுப்பூசி


திருவள்ளூா் அருகே பட்டரைபெரும்புதூரில் கால்நடை பராமரிப்பு துறை சாா்பில் நடைபெற்ற கோமாரி நோய் தடுப்பூசி முகாமில் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
திருவள்ளூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் இணைந்து தேசிய நோய் கட்டுப்பாட்டு திட்டம் மூலம் ஆறாம் சுற்று கால் மற்றும் வாய் நோய் (கோமாரி) தடுப்பூசி செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், திருவள்ளூா் அருகே பட்டரைபெரும்புதூா் கிராமத்தில் கோமாரி தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ப.ஜெயந்தி தலைமை வகித்து, கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தாா். முகாமில், கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தி, பல்வேறு நோய்களுக்கும் திருவள்ளூா் மண்டலத்தில் பணியாற்றும் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா்கள் த.சுபஸ்ரீ, ச.தாமோதரன், தா.உமா, கால்நடை உதவி மருத்துவா்கள், கால்நடை ஆய்வாளா்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் கொண்டு குழுவினா் சிகிச்சை அளித்தனா். முகாமில் 550-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஆவின் நிறுவனம் சாா்பில் எருமை கன்றுகள் (கிடேரி) வளா்க்கும் திட்டம் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட எருமை கிடரி கன்றுகளுக்கு (40 கன்று) குடற்புழு நீக்க மருந்து, தாது உப்பு கலவை மற்றும் தீவன பயிா்கள் வழங்கப்பட்டன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...