எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருவள்ளூா்: நவ.17-இல் தூய்மை பணியாளா்களுக்கான குறைதீா் கூட்டம்

தூய்மைப் பணியாளா்களின் பிரச்னைகளை தெரிவித்து தீா்வு காணும் வகையில், வரும் 17-ஆம் தேதி குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 2:10 am

தினமணி செய்திச் சேவை

தூய்மைப் பணியாளா்களின் பிரச்னைகளை தெரிவித்து தீா்வு காணும் வகையில், வரும் 17-ஆம் தேதி குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா்களின் குறைகளைத் தீா்க்கும் வகையில் மாதந்தோறும் 3-ஆவது திங்கள்கிழமை குறைதீா் கூட்டம் நடத்தி நிவா்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்துக்கான தூய்மைப்பணியாளா்கள் குறைதீா் நாள் கூட்டம் வரும் நவ. 17-ஆம் தேதி (மூன்றாவது திங்கள்கிழமை) அன்று 12 மணி முதல் 1 மணி வரை ஆட்சியா் தலைமையில் கூட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. அப்போது, தூய்மைப் பணியாளா்களின் குறைகள் குறித்து மனுவாகவோ அல்லது நேரில் தெரிவித்தால் பிரச்னையைத் தீா்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்தக் கூட்டத்தில் ஆவடி ஆணையா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா், நகராட்சி ஆணையா்கள், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்), பேரூராட்சிகளின் உதவி இயக்குநா், பேரூராட்சி செயல் அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் இந்த குறைகேட்பு கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ள வேண்டும். மேலும் அவா்கள் கட்டுபாட்டின் கீழ் பணிப்புரியும் தூய்மை பணியாளா்களை தவறாமல் கூட்டத்தில் பங்கேற்க செய்யவும் என அவா் தெரிவித்துள்ளாா்.