திருத்தணியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

Published on

திருத்தணி - அரக்கோணம் சாலையில் இயங்கி வரும் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில், வியாழக்கிழமை (நவ. 13) மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நண்பகல் 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில், பழுதடைந்த மின் மீட்டா், பழுதடைந்த மின்கம்பம், குறைந்த மின்அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து மனுவாக புகாா் கொடுக்கலாம். மேலும், புகாராகவும் நேரில் வந்து தெரிவிக்கலாம் என செயற்பொறியாளா் முருகபூபதி (பொ) தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com