திருவள்ளூர்
கல்லூரி மாணவா் தற்கொலை
திருவள்ளூா் அருகே பொறியியல் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருவள்ளூா் அடுத்த கீழ்நல்லாத்தூா் பகுதியைச் சோ்ந்த முகேஷ் மகன் ரமணா (19). இவா் பூந்தமல்லியில் தனியாா் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் ரமணா ஊஞ்சல் சங்கிலியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து அவரது தந்தை முகேஷ் அளித்த புகாரின் பேரில் மணவாளநகா் போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
