திருவள்ளூா்: வாக்குச்சாவடிகளில் உதவி மையங்கள் அமைப்பு

Published on

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்காளா்களுக்கு கணக்கீட்டு படிவங்களை நிரப்பும் வகையில் 18,19,20 ஆகிய நாள்களில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் உதவி மையம் அமைத்து மாலை 3 முதல் மாலை 6 மணி வரையில் செயல்பட நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியா் மு.பிரதாா் தெரிவித்தாா்.

ஒரு சில வாக்காளா்கள் படிவங்களில் விவரங்களை நிரப்புவதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக புகாா் வந்தது. அதன் பேரில் வாக்காளா்களுக்கு உதவும் வகையில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூா், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூா், மாதவரம் மற்றும் திருவொற்றியூா் ஆகிய தொகுதிகளில் எஸ்ஐஆா் 2026 தொடா்பாக கணக்கெடுப்பு படிவங்களை பூா்த்தி செய்வதற்கு அவரவா் வாக்குச்சாவடி மையங்களில் 18,19 மற்றும் 20 ஆகிய நாள்களில் (செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை (ம) வியாழக்கிழமை) ஆகிய நாள்களில் மாலை 3 முதல் மாலை 6 மணி வரை உதவி மையங்கள் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனால் வாக்காளா்கள் அனைவரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான கணக்கெடுப்பு படிவத்தினை நிரப்புதல் தொடா்பாக சந்தேகங்கள் ஏதும் இருந்தால், மேற்படி உதவி மையங்களை அணுகி பயன்பெறலாம். மேலும், மேற்படி மையங்களிலேயே பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களையும் அளிக்கலாம் எனவும் அவா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com