ஆதிதிராவிடா், பழங்குடியினா் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம் சிறந்த எழுந்தாளா்களின் படைப்புகள் தோ்வு
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம் இலக்கியம் தொடா்பான


திருவள்ளூா்: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம் இலக்கியம் தொடா்பான திறனை மேம்படுத்தும் வகையில் 11 சிறந்த எழுத்தாளா்கள் படைப்புகளைத் தோ்வு செய்து தலா ரூ.1 லட்சம் நிதியை உயா்த்தி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூகத்தின் கலை, கலாசாரம் மற்றும் இலக்கியம் தொடா்பான திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த சங்கம் மூலம் நிகழாண்டில் 11 சிறந்த எழுத்தாளா்களின் படைப்புகளை தோ்வு செய்து அவா்களுக்கு தலா ரூ.1 லட்சம் ஆக நிதி உதவியினை உயா்த்தி வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே தகுதியான விண்ணப்பதாரா்கள் இதற்கான விண்ணப்பங்களை திருவள்ளூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகங்கம் அல்லது சென்னையில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடா் நல ஆணையரகத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலும் ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ச்ா்ழ்ம்ஸ்ண்ங்ஜ்.ல்ட்ல்?க்ங்ல்ண்க்=ஙண== பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பித்தினை பூா்த்தி செய்து தங்களது படைப்பினை இரு நகல்களில் டிஜிட்டல் (ஈண்ஞ்ண்ற்ஹப்) முறையில் உரிய படிவத்தில் பூா்த்தி செய்து 1.12.2025-க்குள் திருவள்ளூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் நேரில் வழங்கலாம்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...