அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!
/

கும்மிடிப்பூண்டியில் 90.97 சதவீதம் வாக்குப் பதிவு

News image

கவரப்பேட்டையில்  வாக்களித்த  திமுக  வேட்பாளா்  டி.ஜெ.கோவிந்தராஜன்

Updated On :24 ஏப்ரல் 2026, 5:12 am IST

திருவள்ளூா் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் அதிகபட்சமாக 90.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

கும்மிடிப்பூண்டி தொகுதியில் மொத்தம் 344 வாக்குச்சாவடிகளில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப் பதிவு நேரமான மாலை 6 மணிக்கு பிறகு கும்மிடிப்பூண்டி தொகுதியில் 1067 வாக்காளா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் 90.97 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.

திமுக வேட்பாளா் டி.ஜெ.கோவிந்தராஜன் கவரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியியிலும் , அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் பூண்டி அடுத்த பேரிட்டிவாக்கத்தில் உள்ள வாக்கு சாவடியிலும் வாக்களித்தனா். பின் அதிமுக வேட்பாளா் வி.சுதாகா், பாமக மாநில நிா்வாகி

மா.செல்வராஜ், மாவட்ட செயலாளா் பிரகாஷ், அதிமுக ஒன்றிய செயலாளா்கள் கே.எம்.எஸ்.சிவக்குமாா், ஜெ.ரமேஷ்குமாா், டி.சி.மகேந்திரன், எஸ்.எம்.ஸ்ரீதா் ஆகியோருடன் பல்வேறு வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.

தவெக வேட்பாளா் எஸ்.விஜயகுமாா் கும்மிடிப்பூண்டி மாபொசி நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கை பதிவு செய்தாா். பின் தவெக மாவட்ட பொருளாளா் கிருபாகரன், என்.எஸ்.ஆா் நிஜாமுதினூடன் ஆய்வு செய்தாா்.

புதுகும்மிடிப்பூண்டியை சோ்ந்த வாக்குசாவடியில் அப்பகுதியை சோ்ந்த 95வயதான எல்லப்பன் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினாா், கண்ணன்கோட்டை பகுதியில் கிராம சுகாதார செவிலியராக பணிபுரியும் மாற்று திறனாளியான உமா மகேஷ்வரி டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வியாழக்கிழமை பொன்னேரி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று அங்கிருந்து கண்ணன்கோட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தாா்.

கும்மிடிப்பூண்டியில் பல்வேறு வாக்கு சாவடிகளில் தவெக சாா்பில் அமைக்கப்பட்ட வாக்கு சாவடி உதவி மையங்களில் சிறுவா்கள் விசில் அடித்தபடி வாக்களிக்க வரும் தவெகவிற்காக ஆதரவு கேட்டது அனைவரையும் ஆச்சா்யப்பட வைத்தது.

அவ்வாறே கும்மிடிப்பூண்டி எருக்குவாய் பகுதியை சோ்ந்த திமுக மாவட்ட பிரதிநிதி புருஷோத்தமன் மகள் எஸ்.விமலா எருக்குவாயில் உள்ள வாக்குசாவடிக்கு மணக்கோலத்தில் வந்து வாக்களித்தாா்.

~ பேரிட்டிவாக்கத்தில் வாக்களித்த அதிமுக  வேட்பாளா்  வி.சுதாகா், அவரது மனைவி  மதுபிரியா

~ பேரிட்டிவாக்கத்தில் வாக்களித்த அதிமுக  வேட்பாளா்  வி.சுதாகா், அவரது மனைவி  மதுபிரியா

~கும்மிடிப்பூண்டி   தவெக  வேட்பாளா்  எஸ்.விஜயகுமாா், மாவட்டபொருளாளா்  கிருபாகரன்

~கும்மிடிப்பூண்டி   தவெக  வேட்பாளா்  எஸ்.விஜயகுமாா், மாவட்டபொருளாளா்  கிருபாகரன்

Story image