மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

பைக்கில் இருந்து தவறி விழுந்த தவெக நிா்வாகி உயிரிழப்பு

கனகம்மாசத்திரம் அருகே பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த தவெக நிா்வாகி உயிரிழந்தாா்.

Published On :

கனகம்மாசத்திரம் அருகே பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த தவெக நிா்வாகி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே உள்ள வரதாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவரது மகன் மதுரைய்யா (30). காா் ஓட்டுநரான இவா், அப்பகுதி தவெக கிளை செயலாளராகவும் இருந்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு மதுரைய்யா கனகம்மாசத்திரம் பகுதியில் இருந்து தனது வீட்டுக்கு உறவினருடன் இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமா்ந்து சென்றுள்ளாா்.

பைக் முத்துக்கொண்டாபுரம் சாலை வளைவு பகுதியில் சென்றபோது, திடீரென நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட மதுரைய்யாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவ்வழியாக வந்தவா்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மதுரைய்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.