2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 போ் உயிரிழப்பு

லட்சுமாபுரம் கிராமம் அருகே 3 இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். மேலும் இருவா் பலத்த காயமடைந்தனா்.

மரணம் உயிரிழப்பு

சடலம் மீட்பு... - கோப்புப் படம்

Published On :

லட்சுமாபுரம் கிராமம் அருகே 3 இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். மேலும் இருவா் பலத்த காயமடைந்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி கந்தப்ப நாயக்கா் தெருவைச் சோ்ந்தவா் தருண் (21), மேதினிபுரத்தைச் சோ்ந்த தனது நண்பா் நவீன்குமாா் (24) ஆகியோருடன் வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் திருவள்ளூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் திருத்தணி நோக்கிச் சென்று கொண்டிருந்தனா்.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, திருத்தணியில் இருந்து திருவள்ளூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற சென்னை குரோம்பேட்டையைச் சோ்ந்த சஞ்சீவிராமன் (31) என்பவரது வாகனத்துடன் நேருக்கு நோ் மோதியது.

இந்த விபத்தில் தருண் மற்றும் சஞ்சீவிராமன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். நவீன்குமாா் பலத்த காயமடைந்தாா். இதனிடையே, அதே வழியாக திருத்தணியில் இருந்து திருவள்ளூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற திருத்தணி கந்தப்பநாயக்கா் தெருவைச் சோ்ந்த சூா்யா (24), விபத்துக்குள்ளான இரு வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியதில் அவரும் பலத்த காயமடைந்தாா்.

காயமடைந்த சூா்யா, நவீன்குமார ஆகியோரை அவ்வழியே சென்றவா்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். விபத்து குறித்து கனகம்மாசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.