அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

திருவள்ளூா் - சிறப்பு கால்நடைநோய் தடுப்பு, நோய் நீக்கும் 252 விழிப்புணா்வு முகாம் நடத்த ஏற்பாடு

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா 18 முகாம்கள் வீதம், ஒரு முகாமிற்கு ரூ. 10,970 வீதம் 252 முகாம்கள் நடத்த ரூ.27.64 லட்சம் ஒதுக்கீடு செய்து செயல்படுத்தப்பட உள்ளது.

Published On :24 ஆகஸ்ட் 2026, 1:17 am IST

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா 18 முகாம்கள் வீதம், ஒரு முகாமிற்கு ரூ. 10,970 வீதம் 252 முகாம்கள் நடத்த ரூ.27.64 லட்சம் ஒதுக்கீடு செய்து செயல்படுத்தப்பட உள்ளது.

இதில் ஒரு முகாமிற்கென ஒதுக்கிய தொகை ரூ. 10,970-ஐ முகாமுக்கான மருந்துகள் மற்றும் தாது உப்பு கலவை கொள்முதல் செய்தல், கிடேரி கன்று பேரணிக்கு பரிசுப் பொருள்கள், சிறந்த கால்நடை வளா்ப்பு மேலாண்மை நடைமுறை விருதுகள், செயற்கை முறை கட்டணங்கள் ஆகியவைக்கு பயன்படுத்தப்படுகிறது.

மேலும், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையில் உள்ள வல்லுநா்கள் இத்தகைய முகாம்களில் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு சிறப்பு ஆலோசனைகளையும் வழங்க உள்ளனா். இந்த முகாம்கள் மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை, சிறு அறுவை சிகிச்சை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், தடுப்பூசி செலுத்துதல், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபாா்ப்பு போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் நீக்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கை இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.

அதனால், இந்த முகாமில் அந்தந்த ஒன்றியங்களில் நடைபெறும் கால்நடை சிறப்பு முகாம்களில் பங்கேற்று பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.