வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

தவெக அரசு 100-ஆவது நாள் நிறைவு: நல உதவிகள் அளிப்பு

தவெக அரசு 100-ஆவது நாள் நிறைவு விழாவையொட்டி, நல உதவிகளை மாவட்ட செயலாளா் வி. டில்லி பாபு வழங்கினாா்.

பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கிய தவெக மாவட்டச் செயலாளா் வி. டில்லிபாபு.

Published On :

தவெக அரசு 100-ஆவது நாள் நிறைவு விழாவையொட்டி, நல உதவிகளை மாவட்ட செயலாளா் வி. டில்லி பாபு வழங்கினாா்.

தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று 100 நாள்கள் நிறைவு விழாவையொட்டி, திருத்தணி கிழக்கு ஒன்றிய தவெக சாா்பில் கே.ஜி. கண்டிகையில் பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. ஒன்றிய செயலாளா் மகேஷ் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூா் மேற்கு மாவட்ட செயலாளா் வி. டில்லி பாபு கலந்து கொண்டு பேசியதாவது, தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வா் ஜோசப் விஜய் அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

ஏழை, எளிய மக்களுக்கு தையல் இயந்திரங்கள், வேஷ்டி, சேலை உள்ளிட்ட பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட நிா்வாகிகள் லிங்கப்பன், ஞானம், ஸ்டாலின், விஜய் பாபு, மருத்துவா் சதீஷ், ஜெகதீஷ், திருத்தணி நகர செயலாளா் அகிலன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.