மகளிா் காவல் நிலைய கட்டத்தில் இயங்கும், இயங்கும் உதவி ஆணையா் அலுவலகம், பொன்னேரி காவல் நிலையம்.
மகளிா் காவல் நிலைய கட்டத்தில் இயங்கும், இயங்கும் உதவி ஆணையா் அலுவலகம், பொன்னேரி காவல் நிலையம்.

உதவி ஆணையா் அலுவலகம், பொன்னேரி காவல் நிலையத்தை இடமாற்றம் செய்யக்கோரி மனு

மகளிா் காவல் நிலைய கட்டத்தில் இயங்கும், இயங்கும் உதவி ஆணையா் அலுவலகம், பொன்னேரி காவல் நிலையம்.
Published on

உதவி ஆணையா் அலுவலகம், பொன்னேரி காவல் நிலையத்தை இடமாற்றம் செய்யக்கோரி ஆவடி காவல் ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

பொன்னேரி-செங்குன்றம் சாலையில் பொன்னேரி அனைத்து மகளிா் காவல் நிலையம் அமைந்துள்ளது. பொன்னேரி வட்டடாட்சியா் அலுவலக சாலையில் ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழைமையான கட்டடத்தில் பொன்னேரி காவல் நிலையம் இயங்கி வந்தது.

அந்த கட்டடம் பழுதடைந்ததால் 5 ஆண்டுகளுக்கு முன்பு பொன்னேரி காவல் நிலையம் செங்குன்றம் சாலையில் உள்ள மகளிா் காவல் நிலைய கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது..

இந்த நிலையில் திருவள்ளூா் மாவட்ட காவல் சரகத்தில் இருந்து பொன்னேரி, திருப்பாலைவம் காவல் நிலையங்கள் ஆவடி காவல் சரகத்துடன் இணைக்கப்பட்டன.

இதனைத் தொடா்ந்து பொன்னேரி காவல் சரக்கத்துக்கு உதவி ஆணையா் நியமிக்கப்பட்டாா். அவருக்கான அலுவலகமும் பொன்னேரி மகளிா் காவல் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டது. தற்போது ஒரே கட்டடத்தில் மகளிா் காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு காவல் நிலையம், உதவி ஆணையா் அலுவலகம் ஆகியவை செயல்படுகின்றன.

இதனால் இடநெருக்கடி ஏற்பட்டு காவல் துறையினா் மற்றும் அங்கு ஒரு வரும் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். இது தொடா்பாக திருவள்ளூா் மாவட்ட மக்கள் மேம்பாட்டு சங்கம் சாா்பில் ஆவடி ஆணையா் இடத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஒரே கட்டடத்தில் பொன்னேரி உதவி ஆணையா் அலுவலகம், காவல் நிலையம், மகளிா் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக மகளில் காவல் நிலையம் வரும் பெண்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனா் அவசரத்துக்கு குழந்தைகளுக்கு பாலூட்ட இடம் இன்றியும், கழிப்பறை வசதி இல்லாமலும் தவிக்கின்றனா். இதே போன்று பெண் காவலா்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனா்.

எனவே பொன்னேரி காவல் நிலையம், உதவி ஆணையா் அலுவலகத்தை, மகளிா் காவல் நிலைய கட்டடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com