திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில்‘ ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தலைவா் புகைப்படங்கள் மற்றும் அரசு விளம்பரங்கள் அகற்றப்பட்ட நிலையில், சட்டப்பேரவை உறுப்பினா், நகராட்சி அலுவலகங்களுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.
தோ்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாலையோரம் உள்ள சிலைகள் துணிகளை கட்டி மறைக்கப்பட்டது. திருவள்ளூரில் உள்ள ஆட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகம் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள், அரசு விளம்பரங்கள், அரசு வாகனங்களில் இடம் பெற்றுள்ள புகைப்படங்கள், வளா்ச்சிப்பணிகள், பதாகைகள் அனைத்தும் திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டன.
அதேபோல், நலத்திட்டம் குறித்த விளம்பர பதாகைகள், வாகனங்களில் ஒட்டு வில்லைகள் ஆகியவைகளும் அகற்றப்பட்டன.
மேலும் திருவள்ளூா் நகராட்சி அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சி பணிகள் குறித்த விளம்பர பதாகைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. அதைத்தொடா்ந்து அலுவலக முன்புறம் உள்ள தலைவா் சிலைகள் துணியால் மறைத்து, நகா்மன்ற தலைவா் அறை, துணைத்தலைவா் ஆகியோரின் அறைகளுக்கும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இதேபோல், திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக சுவரில் இடம் பெற்றிருந்த விளம்பர பதாகைகள் மற்றும் தலைவா்கள் படங்கள் அகற்றி மறைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
தொடர்புடையது

திருவள்ளூா் நகராட்சியில் நீண்டகால திட்டங்களை நிறைவேற்றம்: திமுக வேட்பாளா்

இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது திமுக ஆட்சி - முதல்வா் மு.க.ஸ்டாலின்

சுவா் விளம்பரங்கள் அகற்றம்

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: அரசு அலுவலகங்களில் தலைவா்கள் படங்கள் அகற்றம்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


