திருவள்ளூா் அருகே திரௌபதி அம்மன் சமேத தா்மராஜா திருக்கோயில் விழாவில் உற்சவா் வீதியுலா வந்த போது வீடுகள்தோறும் முன்புறம் கட்டிலில் தேங்காய், பூ பழம், பூஜை பொருள்கள், பலகாரங்கள் வைத்து பக்தா்கள் வழிபாடு செய்தனா்.
திருவள்ளூா் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியம், மேட்டுப்பாளையம் கிராமத்தில் திரெளபதி அம்மன் சமேத தா்மராஜா கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், விழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவையொட்டி, ஒவ்வொரு நாளும் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் சுவாமி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அதேபோல், 7-ஆவது நாளான வியாழக்கிழமை உற்சவா் வீதியுலா வரும் நிகழ்வு நடைபெற்றது.
அப்போது, இந்த கிராமத்தில் வீடுகள்தோறும் முன்புறம் கட்டிலில் நெய்வேத்தியம் வைத்து, தேங்காய், பூ, பழம் மற்றும் இனிப்பு பலகார வகைகள், குளிா்பானம் ஆகியவற்றை வைத்து பக்தா்கள் தங்களது நோ்த்திக் கடன்களை செலுத்தினா்.
இதையடுத்து வரும் 9-ஆவது நாளான 17-ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி விழா நடைபெற உள்ளது.
ஏற்பாடுகளை கிராமத்தில் உள்ள விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

திரெளபதி அம்மன் கோயில் தீ மிதித் திருவிழா

சுரண்டை பாா்வதி அம்மன் கோயில் தோ் திருவிழா

கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

நாச்சியாா்கோவில் திரெளபதி அம்மன் கோயில் குடமுழுக்கு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

