முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

நாச்சியாா்கோவில் திரெளபதி அம்மன் கோயில் குடமுழுக்கு

நாச்சியாா்கோவில் திரெளபதி அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் திரெளபதி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கில் கலசத்துக்கு ஊற்றப்பட்ட புனிதநீா்.

Updated On :1 மே 2026, 3:58 am IST

நாச்சியாா்கோவில் திரெளபதி அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள நாச்சியாா்கோவில் திரெளபதி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா கடந்த செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையடுத்து புதன்கிழமை விக்னேஷ்வர பூஜையுடன் இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

வியாழக்கிழமை காலை நான்காம் கால பூஜையுடன் தொடங்கி மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாஜனம், வேதிகா அா்ச்சனை, நடைபெற்றது.

பின்னா் கடம் புறப்பாடு தொடங்கி யாகசாலையில் இருந்து புனித நீா் எடுத்து வரப்பட்டு மூலவா், பரிவார தெய்வங்களின் விமான கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

இதையடுத்து இரவு திருக்கல்யாண கோலத்தில் அம்மன் புறப்பாடு நடைபெற்றது. ஏற்பாடுகளை நாச்சியாா் கோவில் கீழ கம்மாளா் தெருவாசிகள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.