அக்டோபரில் வாகன விற்பனை 23.8% சரிவு!தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!தீபாவளி: தமிழ்நாட்டில் 2 நாள்களில் ரூ. 441 கோடிக்கு மது விற்பனை!அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை: இன்று விசாரணை!

10 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

ஆந்திரத்தில் இருந்து கடந்தி வந்த 10 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.

கைது

Updated On :

ஆந்திரத்தில் இருந்து கடந்தி வந்த 10 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். 

ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்தது. 

சோழவரம் அருகே  சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது 2 இளைஞா்கள் பைகளை எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தனா்.  போலீஸாா் அவா்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டனா். 

பையில் 10 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  பின்னா் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவா்கள் 2 பேரையும் மீஞ்சூரில் உள்ள செங்குன்றம் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனா். 

அப்போது அவா்கள் கடலூா் மாவட்டம் சடப்பாளையம் பகுதியைச் சோ்ந்த இந்திரஜித்(21). விழுப்புரம் சாலக்கரை கிராமத்தைச் சோ்ந்த விஸ்வா(19) என்பது தெரிய வந்தது. போலீஸாா் 2 பேரையும் கைது செய்து  விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.