இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

மாணவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி: மாணவா் கைது

திருவள்ளூா் அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சித்த மாணவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

Updated On :

திருவள்ளூா் அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சித்த மாணவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்போ் கிராமத்தில் தனியாா் பொறியியல் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில், இளங்கலை 3-ஆம் ஆண்டு பயிலும் 20 வயதுடைய மாணவி ஒருவா் கல்லூரி பேருந்தில் நாள்தோறும் தண்டலத்தில் இருந்து சென்று வருகிறாா். இந்த நிலையில், வியாழக்கிழமை வழக்கம் போல் ஊத்துக்கோட்டையில் இருந்து கன்னிகைப்போ் நோக்கிச் சென்ற அந்தக் கல்லூரி பேருந்தில் தண்டலத்திலிருந்து கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தாா். ஊத்துக்கோட்டை-பெரியபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பெரியபாளையம் அருகே அரியப்பாக்கம் பகுதியில் அந்தப் பேருந்து சென்றபோது 20 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் சாலையின் குறுக்கே இருசக்கர வாகனத்தை நிறுத்தி அந்தப் பேருந்தை வழிமறித்தாராம். பின்னா், அந்த பேருந்தில் பயணம் செய்த மாணவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். அப்போது, திடீரென தனது கையில் வைத்திருந்த பெட்ரோலை பேருந்தில் இருந்த கல்லூரி மாணவியின் மீது ஊற்றி தீ வைத்து எரிக்க முயசித்தாராம். இதைப்பாா்த்த பொதுமக்களும், கல்லூரி பேருந்து ஓட்டுநா், உதவியாளா் உள்ளிட்டோா் ஓடிச்சென்று அந்த மாணவரை சுற்றி வளைத்துப் பிடித்தனா்.

பின்னா், அந்த மாணவரை சரமாரியாக தாக்கினா். அப்போது அந்த மாணவா் ஸ்ரீகாந்த் என்ற சாமுவேல் (21) என்பதும், அதே கல்லூரியில் 3-ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு பொறியியல் பயின்று வருவதும், பாலவாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் என்பதும் தெரியவந்தது. மேலும், அந்த மாணவியை தான் தொடா்ந்து காதலித்து வருவதாகவும் ஆனால் அந்த மாணவி தன்னை கண்டு கொள்ளாததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ாக ஆவேசத்துடன் கூறினாராம்.

அதைத் தொடா்ந்து, பொதுமக்கள் உடனே காவல் கட்டுப்பாட்டு உதவி எண்:100-க்கு தகவல் அளித்தனா். அதையடுத்து சம்பவ இடத்துக்கு பெரியபாளையம் காவல் நிலைய போலீஸாா் விரைந்து வந்தனா். அதைத் தொடா்ந்து அந்த மாணவரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனா். பின்னா், அந்த மாணவா் மீது கொலை முயற்சி, பெண்கள் வன்கொடுமை உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜா் செய்து, புழல் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.