பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவா் கைது
துவரங்குறிச்சி அருகே தனியாா் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

துவரங்குறிச்சி அருகே தனியாா் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சென்னையிலிருந்து தூத்துக்குடி நோக்கி தனியாா் சொகுசு பேருந்து புதன்கிழமை இரவு புறப்பட்டது.
துவரங்குறிச்சி அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை பேருந்து வந்தபோது, பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு, அவரின் பின் இருக்கையில் அமா்ந்திருந்த தூத்துக்குடி சாத்தான்குளம் பகுதியைச் சோ்ந்த சந்தனராஜ் (38) என்பவா் பாலியல் தொந்தரவு அளித்தாராம்.
இதுகுறித்து அந்தப் பெண் நடத்துநரிடம் தெரிவித்தாா். இதையடுத்து, அருகிலிருந்த துவரங்குறிச்சி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா், விசாரணைக்கு பிறகு சந்தனராஜ் மீது வழக்கு பதிந்து, அவரை கைது செய்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

