மாணவிக்கு பாலியல் தொந்தரவு; ஆசிரியா் போக்ஸோவில் கைது
சூளகிரி அருகே 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பிஆா்சி மைய மேற்பாா்வையாளா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.
கைது
சூளகிரி அருகே 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பிஆா்சி மைய மேற்பாா்வையாளா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பெரிய எலசகிரியைச் சோ்ந்தவா் ஜெயராமன் (52), இவா் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கும் பிஆா்சி மைய மேற்பாா்வையாளராக உள்ளாா். இந்த நிலையில், அரசுப் பள்ளியில் படிக்கும் 15 வயதான சிறுமிக்கு ஜெயராமன் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் ஒசூா் அனைத்து மகளிா் போலீஸாா் ஜெயராமனிடம் விசாரணை நடத்தி, அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



