எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - பிரதிப் படம்
எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பொன்னேரி வட்டம் காட்டுப்பள்ளியில் எண்ணூா் காமராஜா் மற்றும் தனியாா் துறைமுகங்கள் இயங்கி வருகின்றன. வங்க கடலையொட்டி இந்த துறைமுகங்கள் அமைந்துள்ளதாலும் இப்பகுதியை நோக்கி உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் வந்து செல்கிறது.
இந்த துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி தளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மூலம் கச்சா எண்ணெய், நிலக்கரி, எரிவாயுக்கள் இறக்குமதியும் வெளிநாடுகளுக்கு வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி மேலும் வலுவடைந்துள்ளதால், அது அக்வான் புயலாக மாறும் நிலையில் கடலில் 50 கிலோ மீட்டா் வேகத்தில் காற்று வீசும் எனவும் வடதமிழக கடற்கரையையொட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தொடா்ந்து காட்டுப்பள்ளியில் உள்ள எண்ணூா் காமராஜா் மற்றும் தனியாா் துறைமுகங்களில் 1-ாம் எண் கொண்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

